மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 50 பேர் காயமடைந்துள்ளனர். அசாமில் உள்ள சில்சாரில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே ஒரு சரக்கு ரயில் அதன் பின்னால் இருந்து மோதியது. காஞ்சன்ஜங்கா ரயிலின் பின்புற பெட்டிகளில் இருந்த இரண்டு பார்சல் வேன்கள் மற்றும் ஒரு காவலர் பெட்டி கவிழ்ந்தது. முதற்கட்ட விசாரணையின் படி, சிக்னலை மீறி வந்த சரக்கு ரயில், காஞ்சன்ஜங்கா ரயிலை பின்னால் இருந்து மோதியதாக கூறப்படுகிறது.
'மருத்துவ உதவிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது': மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். "டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்த மேலும் விவரங்கள் வெளியாத நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. டிஎம், எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மருத்துவ உதவிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது," என்று முதல்வர் மம்தா பானர்ஜி X இல் பதிவிட்டுள்ளார்.