
கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமி - நிவாரண தொகை அறிவித்த முதல்வர்
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண தொகையினையும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதத்தூர் கிராமத்திலுள்ள கோயிலில் இன்று(செப்.,10)காலை கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
அப்போது இதன் அருகில் உள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரையானது காவனூர் கிராமத்தினை சேர்ந்த சுதந்திரதேவி(15)என்னும் சிறுமி மீது விழுந்துள்ளது.
சிகிச்சைக்காக அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்னும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நிவாரண தொகை
கடலூர் மாவட்டத்தில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/JGILzUHmpS
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 10, 2023