அடுத்த செய்திக் கட்டுரை

குழந்தைக்கு தயாராகும் பிரபல தன்பாலின ஈர்ப்பு தம்பதியினர்!
எழுதியவர்
Sindhuja SM
Jan 09, 2023
04:17 pm
செய்தி முன்னோட்டம்
அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தன்பாலின ஈர்ப்பு தம்பதி ஆவர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற இவர்களது இந்து திருமணத்தின் பிரமாண்டமான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட போது இந்தியாவே அதை திரும்பி பார்த்தது.
பல செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த திருமணம் விமர்சையாக பேசப்பட்டது.
அதே தம்பதியினர் தற்போது தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக அறிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவிட்டிருக்கும் இவர்களுக்கு, குழந்தை "ஆன் தி வே"யில் இருக்கிறதாம்.
தற்போதைய நிலவரப்படி, ஒரு சாதாரண ஜோடியைப் போலவே அனைத்து பண்டிகை நாட்களையும் தங்கள் குழந்தையோடு கொண்டாட விரும்புவதாக இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
Instagram அஞ்சல்