Page Loader
மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்! 
கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்

மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்! 

எழுதியவர் Arul Jothe
May 24, 2023
03:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் செப்டம்பர் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. மேலும், இது மாநில மற்றும் பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக வருகிறது. தேர்தலின் போது பணப் பயன்பாடு பொதுவாக அதிகரிக்கும் என்பதாலும், அவ்வப்போது கணக்கில் காட்டப்படாத பணம் புழக்கத்தில் வரும் என்பதாலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஒரே இரவில், நாட்டில் புழக்கத்தில் இருந்த 86% ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு, வங்கிகளில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், வரித்துறையின் ஆய்வுகளை தவிர்க்கவும், மக்கள் பொருட்கள் வாங்கும் கோதாவில் இறங்கியுள்ளனர்.

Demonetization 

கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்

விற்பனையாளர்களும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விற்பனையை அதிகரிக்கும் அதிகரிக்கும் நோக்கில், 2000 ரூபாய் நோட்டை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கின்றன. மாம்பழ விற்பனையாளர் ஒருவர், "ஏராளமானோர் மாம்பழங்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். செப்டம்பர் 30க்கு முன் அனைத்தையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்வேன். நோட்டு செல்லுபடியாகும் என்பதால் பயம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். ஒரு வாட்ச் கடையின் மேலாளர், தனது கடையில் 2000 ரூபாய் நோட்டுகள், 60%-70% அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். உணவு விநியோக நிறுவனமான Zomato தனது ட்விட்டர் கணக்கில் 72% மக்கள், cash on delivery பயன்படுத்தி, 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்வதாக தெரிவித்துள்ளது.