
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக திண்டுக்கலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர், சென்னையில் தங்கியிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது மருத்துவர்களின் கவனிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரிசோதனைகளின் அடிப்படையில், செரிமானக் கோளாறே உடல்நலக்குறைவுக்கு காரணம் எனக்கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
திண்டுக்கல் சீனிவாசன் - மருத்துவமனையில் அனுமதி#dindigulsrinivasan #admk #hospital #Kumudamnews24x7 pic.twitter.com/EqAA09kUKX
— Kumudam News 24x7 (@kumudamNews24x7) April 15, 2025