வானில் ஆபத்து வந்தால் யார் காப்பாற்றுவார்? வைரலாகும் பிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாரின் பழைய பேட்டி
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து தெல் அவீவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில், இணை விமானியின் கொடூர கத்திக்குத்துத் தாக்குதலையும் மீறி, சாதுரியமாக செயல்பட்டு 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார் உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்குப் பிறகு, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அவர் அளித்த பாட்காஸ்ட் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல வைரலாகி வருகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
உங்களை யார் காப்பாற்றுவார்?
ஸ்மித் மச்சாரின் உருக்கமான பேச்சு
கடந்த 2025 அக்டோபர் மாதம் போனஃபைட் பேண்டர் (Bonafide Banter) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஜாலக் மேத்தா என்பவரிடம் பேசுகையில், "நாம் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் போது ஏதேனும் ஆபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் உங்களை யார் காப்பாற்றுவார் என்று யோசித்ததுண்டா?
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் ஏதேனும் மருத்துவர் இருந்தால் தப்பிக்கலாம்.
இல்லையெனில், அங்குள்ள பயிற்சி பெற்ற விமான ஊழியர்கள் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்." என்று கூறியிருந்தார்.
நிஜ சம்பவம்
அன்று அவர் கூறிய வார்த்தைகளும் இன்றைய நிஜ சம்பவமும்
மேலும் அப்பேட்டியில், பொதுமக்கள் விமான ஊழியர்களை வெறும் பணிப்பெண்களாக மட்டுமே பார்க்கிறார்கள் என்றும், ஆனால் ஒரு நெறிமுறையான ஆபத்து அல்லது அவசரநிலை வரும்போதே அவர்களின் உண்மையான மதிப்பும் பயிற்சியும் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அன்று அவர் பேசிய வார்த்தைகள், இன்று அவரே படுகாயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவைத் திறந்து பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கிய நிஜ சம்பவத்தோடு பொருந்திப் போவது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பாராட்டு
தபூக்கில் சிகிச்சை மற்றும் உலகத் தலைவர்களின் பாராட்டு
17,000 அடிக்கும் அதிகமான அதிவேக வீழ்ச்சியின் போது, கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் மச்சார் காட்டிய மன உறுதியால் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
தற்போது தபூக் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து ஸ்மித் மச்சார் குணமடைந்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் ஸ்மித் மச்சாரின் இந்த வீரச் செயலைப் பாராட்டி நிஜ ஹீரோ என புகழ்ந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A year ago, Captain #SmitMachchhar was asked what matters more: a smooth landing or an on-time arrival?
— Kumar Manish (@kumarmanish9) October 1, 2026
“None. SAFE.”
A year later, stabbed by his co-pilot, he lived those words. He opened the cockpit door and helped save 174 lives.
He proved it. HERO 🫡 pic.twitter.com/rqSbYmpkVW