NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 17, 2024
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக பணம் கொடுத்து வாங்க முயற்சிப்பதாக அவரது கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கைத் தீர்மானம் டெல்லி சட்டசபையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையில், மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

    மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    டெல்லி

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்

    இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரை பெற்ற டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி(இன்று) அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

    ஆனால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    இந்த வழக்கை மார்ச் 16ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது.

    அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.

    இதற்கிடையில், கடந்த புதன்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியது.

    வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் கெஜ்ரிவாலிடம் கேட்டு கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    டெல்லி

    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் பஞ்சாப்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்
    வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு  ஹரியானா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    ஆம் ஆத்மி

    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா இந்தியா
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025