NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை-கோவா விமான சேவை துவங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது
    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது

    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது

    எழுதியவர் Nivetha P
    Aug 08, 2023
    03:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு தினசரி விமானசேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஏர்-இந்தியா உள்ளிட்ட 3 நிறுவனங்களின் விமான சேவைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

    இதில் இண்டிகோ-நிறுவன விமானங்கள் உள்நாட்டு சேவைகளை மட்டும் அளிக்கிறது.

    கொரோனா காலத்திற்கு பிறகு, ஸ்பைஸ்-ஜெட் விமான நிறுவனம் வெளிநாடு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில், மீண்டும் மதுரையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு சேவையினை துவங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே இந்நிறுவனம் சென்னை வழியே கோவா செல்லும் விமான சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இன்று(ஆகஸ்ட்.,8)முதல் SG-2981என்னும் விமானம் மதுரையிலிருந்து 12.05மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையிலிருந்து மாலை 4 மணிக்கு கோவா சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    விமானம் 

    ஹைதராபாத், கொழும்பு உள்ளிட்ட விமான சேவைகளும் துவங்கவுள்ளது 

    அதேபோல், கோவாவிலிருந்து SG-2983 விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்தடைந்து, சென்னையிலிருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை சென்றடையும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, ஆகஸ்ட் 10ம்தேதி முதல் 19ம்தேதி வரை ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து தினமும் காலை 10.35மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு நண்பகல் 12.15க்கு சென்றடையும்.

    தொடர்ந்து, SG-04ஆக மதுரை மாநகரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு துவங்கி 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையவுள்ளது என்று கூறப்படுகிறது.

    அதே விமானம் கொழும்புவில் இருந்து பிற்பகல் 3.25மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமானநிலையம் செல்கிறது.

    அதன் பின்னர் மதுரையிலிருந்து மாலை 5.25க்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஹைதராபாத் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    விமான சேவைகள்

    சமீபத்திய

    காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை  ஜம்மு காஷ்மீர்
    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா இந்தியா
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா

    மதுரை

    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு கோவில் திருவிழாக்கள்

    விமான சேவைகள்

    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? விமானம்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025