LOADING...
5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து! 
5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - வழக்குகள் ரத்து

5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து! 

எழுதியவர் Siranjeevi
Apr 24, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது. இந்தியாவில் ஏப் 24 இல் மட்டும் 10,112 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீதிபதிகளான அனிருத்தா போஸ், எஸ் ரவீந்திர பட், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நீதிபதி சூர்யா காந்த் ஒரு வாரத்திற்கு முன் குணமடைந்துள்ளார். இதனால், புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement