நீட் தேர்வு மோசடி வழக்கு: ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மோசடி விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கான விசாரணையை மேற்கொண்ட பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) அவர்களை கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியை தியோகர் காவல்துறை உறுதிப்படுத்தியது. மேலும் விசாரணைக்காக அந்த ஐந்து நபர்களும் பாட்னாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அவதேஷ் குமார் மற்றும் அவரது மகன் அபிஷேக் என்வர்கள் உள்ளனர். இதில் அபிஷேக் என்பர்கள் நீட் மாணவர் ஆவார். இருவரும் தலைநகர் ராஞ்சியில் வசிப்பவர்கள் ஆவர். ஜார்கண்டின் கட்டுமானத் தொழில் செய்து வந்த உறவினர்கள் மூலம் அவதேஷ் முக்கிய சந்தேக நபரான சிக்கந்தர் யாதவேந்துவுடன் தொடர்பு வைத்திருந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
சிக்கந்தர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு
நீட் வினாத்தாளை வாங்குவதற்காக யாதவேந்துவிடம் ரூ.40 லட்சம் கொடுத்ததாக அபிஷேக் கின் தந்தை அவதேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தற்போது டானாபூர் நகராட்சி கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக பணிபுரியும் முன்னாள் நீட் ஒப்பந்ததாரரான சிக்கந்தர், ஜார்க்கண்டில் நிறைய சொத்துக்களை வைத்துள்ளார். ராஞ்சியில் உள்ள இன்பினிட்டி என்ற ஒரு முக்கிய விளையாட்டு விற்பனை நிலையம் மற்றும் ராஞ்சியின் பாரியாடு பகுதியில் உள்ள ஒரு பரந்த குடியிருப்பு ஆகியவை சிக்கந்தருக்கு சொந்தமானைவைகள் தான். பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு(EOU) சிக்கந்தர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகிறது. ] நீட் வழக்கில் முன்னதாக 13 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.