Page Loader
இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன்
இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன்

இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன்

எழுதியவர் Nivetha P
Apr 20, 2023
11:58 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் இஎம்ஐ(மாத தவணை) முறையில் இறைச்சி வாங்கிய கட்டணத்தை திரும்ப செலுத்தும் முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் சக்தி அண்மை காலமாக குறைந்து வருகிறது. அதன் தாக்கம் தான் இந்த இறைச்சிக்கான மாத தவணை முறை. குனியமுத்தூர் பகுதியில் அல் அமீன் என்னும் பெயரில் இறைச்சி கடையினை நடத்துபவர் ரியாஸ். இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர் வசதிக்காக இந்த இஎம்ஐ ஆப்ஷனை அமல்படுத்தியுள்ளார். இது குறித்து ரியாஸ் கூறுகையில், மொபைல், டிவி, போன்ற சாதனங்கள் இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் பொழுது இறைச்சியை ஏன் அவ்வாறு வாங்க கூடாது என யோசித்தே இம்முறையினை கொண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இறைச்சி 

மகாராஷ்டிராவில் மாம்பழங்கள் வாங்க இஎம்ஐ ஆப்ஷன் 

மேலும் அவர் பேசுகையில், 5,000க்கும் மேலே இறைச்சி வாங்குபவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 3, 6, 9 மற்றும் 12 மாதங்கள் என இஎம்ஐ முறையில் பணத்தினை செலுத்தலாம். தற்போது ரம்ஜான் பண்டிகை வருவதால் அதிகளவில் இறைச்சி வாங்குபவர்களுக்கு இம்முறை பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் திருமணம் போன்ற விசேஷத்திற்கு அதிகளவில் இறைச்சி வாங்குபவர்களுக்கும் இம்முறை பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் மாம்பழங்கள் வாங்குவதற்கு இஎம்ஐ(மாத தவணை) அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கோவையில் அதே போல் இறைச்சி வாங்க இஎம்ஐ ஆப்ஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.