Page Loader
தமிழக வரலாற்றில் முதல்முறை; தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் நியமனம்
அர்ச்சனா பட்நாயக்

தமிழக வரலாற்றில் முதல்முறை; தலைமை தேர்தல் அதிகாரியாக பெண் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2024
09:35 am

செய்தி முன்னோட்டம்

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) நியமித்தது. இதன் மூலம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அர்ச்சனா பட்நாயக் தற்போது எம்எஸ்எம்இ துறையின் செயலாளராக உள்ளார். அர்ச்சனா பட்நாயக், தலைமை தேர்தல் அதிகாரியாகப் பதவியேற்கும் முன், தமிழக அரசின் அனைத்துப் பணிகளில் இருந்தும் முழுமையாக விடுவித்துக் கொள்வார் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யபிரதா சாஹூ ஏற்கனவே கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு