Page Loader
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 

எழுதியவர் Nivetha P
Jul 29, 2023
12:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரியில் பழையப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று(ஜூலை.,29)பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நேர்ந்த இந்த குடோன் குடியிருப்பு பகுதிகளுக்கிடையே இருப்பதால் அருகிலிருந்த வீடுகளும் இடிந்துவிழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவலளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டத்தகவலில் இவ்விபத்தில் 4பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணம் விசாரணை நடத்திய பின்னரே தெரியவரும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

வெடிவிபத்து நடந்த பகுதி