Page Loader
அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம் 
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 30, 2023
09:36 am

செய்தி முன்னோட்டம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல மாடி கட்டிடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் இன்று(ஜூலை 30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 100 நோயாளிகள் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட தகவல்களின்படி, அகமதாபாத்தின் சாஹிபாக் பகுதியில் அமைந்துள்ள ராஜஸ்தான் மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. "தீயணைக்கும் குழுக்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறுகிறது," என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.டி.சம்பவத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாடி கட்டிடத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்," என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தீ விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதியின் வீடியோ காட்சி