
தமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
செய்தி முன்னோட்டம்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
இது, நிதி அமைச்சராக அவரது முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி அறிக்கையில் வெளியான சிறப்பம்சங்கள்:
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை, 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்
ரூ. 65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்
ட்விட்டர் அஞ்சல்
தமிழக நிதிநிலை அறிக்கை
#BudgetUpdate | தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்
— Sun News (@sunnewstamil) February 19, 2024
▪️ சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு
▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்
▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய…