Loading...
தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு! பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்

தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு! பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
01:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (89) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11) காலமானார். மதுரையை சேர்ந்த இவர், அரசரடி பகுதியில் அமைந்துள்ள ஞானஒளிபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயபாய் வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஆண்டு காலமான நிலையில், தற்போது சாலமன் பாப்பையாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஆழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

தமிழ் பணி

தமிழ் பணியும் பட்டிமன்றப் புகழும்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக தனது பணியைத் தொடங்கிய சாலமன் பாப்பையா, தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த தமிழ்ப் பட்டிமன்றங்களை நடத்திப் புகழ்பெற்றார்.

எளிமையான பேச்சுநடையால் பட்டிமன்றக் கலையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.

இவரது சிறந்த கலை மற்றும் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

பட்டிமன்றங்கள் மட்டுமின்றி சிவாஜி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ADVERTISEMENT