Page Loader
தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்
தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்

தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்

எழுதியவர் Nivetha P
Apr 04, 2023
12:28 pm

செய்தி முன்னோட்டம்

அண்மை காலமாக தமிழகத்தில் தமிழக அரசின் லட்சினையோடு, அரசின் புதிய ஆணைப்படி வரும் 16ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக மாற்றி கொள்ளவேண்டும் என்னும் புதிய தகவல் ஒன்று வாட்ஸ் அப்'ல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து தமிழக மின்னாளுமை இயக்க அதிகாரிகள் ஓர் அறிவிப்பினை அளித்துள்ளார்கள். அதன்படி, இதுபோன்ற எந்தவொரு தகவலையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இந்த போலி தகவலை பரப்பிய தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் இ-சேவை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை பரப்பினால் அந்த மையத்தின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள். ஜாதி சான்றிதழ் என்பது ஒரு நபரின் ஜாதியை உறுதிப்படுத்தும் ஆவண சான்றிதழகாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல்