
பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்
செய்தி முன்னோட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், உடன்பாடு எட்டாத காரணத்தால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்தனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேபோல மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று பேருந்துகள் அனைத்து பணிமனைகளிலிருந்தும், அனைத்து வழித்தடங்களிலிருந்தும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது.
அதன்படி, 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
card 2
மதுரை தவிர மற்ற இடங்களில் பேருந்துகள் இயக்கம்
வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 104.51% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில், 100% அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், மதுரை மாவட்டத்தின் மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்கள் நோக்கி புறப்படும் பேருந்துகள் பலவும் இன்று இயக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை என கூறப்படுகிறது.