Page Loader
திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு 
திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு

திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு 

எழுதியவர் Nivetha P
Apr 14, 2023
02:32 pm

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் மூலவர்மீது நேரடியாக சூரிய ஒளி விழும் அரியநிகழ்வு இன்று(ஏப்ரல்.,14) நடந்தது. இதனை காண திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரம் கொண்டு விநாயகருக்கு என தனி சன்னதி அமைந்த கோயில் என்றால் அது இந்த மணிமுத்தீஸ்வரம் உச்சிஷ்டவிநாயகர் கோயில் தான். தமிழ் புத்தாண்டு மற்றும் இந்த சூரிய ஒளி நிகழ்வு உள்ளிட்டவையால் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தனி யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதிஹோமம் நடத்தப்பட்டது. மேலும் மூலவர் கணபதிக்கு பால், மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகை அபிஷேகங்கள் நடந்தது. மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் தருணத்தில் மகாதீபாராதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post