ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியினை பெற்றார். பின்னர் பிப்ரவரி 10ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அண்மையில் நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று(மார்ச்.,20) ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும், விரைவில் நலம் பெறுவார் என்று மருத்துவமனை சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.