ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு 66,233வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்வெற்றியினை பெற்றார்.
பின்னர் பிப்ரவரி 10ம்தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அண்மையில் நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இதனைதொடர்ந்து தற்போது அவர் கொரோனாவில் இருந்து விடுபட்டுவிட்டார் என்றும்,
அவரது இதயத்தில் ரத்தத்தை பம்ப் செய்வதில் பிரச்சனை இருப்பதால் congestive heart failureக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக ஒரு வீடியோவினை இணையத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்த வீடியோ
#Watch | உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!#SunNews | #EVKSElangovan | @EVKSElangovan pic.twitter.com/wx1MwKofj9
— Sun News (@sunnewstamil) March 22, 2023