
ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசனை நேரில் சந்தித்து கோரியிருந்தார்.
இது தொடர்பாக ம.நீ.ம. கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(ஜன.,25) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற தானும், தனது கட்சியினரும் இயன்ற உதவியை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி தெரிவித்த இளங்கோவன்
ஆதரவு தெரிவித்திருப்பது அவசர நிலை - கமலஹாசன் அறிக்கை
தொடர்ந்துபேசிய அவர், ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது.
அந்த தேர்தலுக்கான முடிவை இப்பொது சொல்ல முடியாது என்றும் கூறினார்.
கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேசநலனுக்காக ஒரே மேடையில் அமரவேண்டும் என்று கூறிய கமல், மக்கள் நீதி மய்ய கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தை நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கைகொண்ட கமலஹாசன் எடுத்துள்ள முடிவு நான் எதிர்பார்த்தது. அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கமல் தங்களுக்கு ஆதரவளிப்பார் என்று தனக்கு தெரியும் என்றும், இயற்கையிலேயே அவர் மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறினார்.
தொடர்ந்து, தனது நன்றியையும் கமலுக்கு அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.