ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மார்ச்.,2) நடந்து முடிந்தது.
இதில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சியினர்களின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் முடிவில், 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு தவிர மற்ற 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
மேலும் அதில் 13 பேர் பத்து வாக்குகளை கூட பெறாமல் ஒற்றை இலக்கத்திலேயே வாக்குகளை பெற்றுள்ளனர்.
யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவு செய்யும் வகையில் நோட்டாவிற்கு 798 வாக்குகள் பதிவாகியிருந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவகுமார் வழங்கினார்
மேலும் சுயேச்சை வேட்பாளர்களான ஆர்.குமார், எம் பிரபாகரன் ஆகியோர் தலா 3 ஓட்டுக்களை மட்டுமே வாங்கியிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் 15வது சுற்றில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று முதலிடத்தினை அடைந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரையடுத்து அதிமுக வேட்பாளாரான கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்றுள்ளார்.
3ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து, தேமுதிக ஆனந்த் 1,432 ஓட்டுகள் பெற்றிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனையடுத்து, இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவகுமார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.