
ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு உள்பட பல கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் இதில் போட்டியிடுகிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் பங்குபெறும் கட்சியினர் கணக்கு பார்க்காமல் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக தனியாக களமிறங்கி, ஒத்தை ஆளாய் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார் தீபன் சக்கரவர்த்தி என்னும் 32 இளைஞர்.
இவர் மைக் சின்னத்தில் இந்த இடைதேர்தலில் போட்டியிடுகிறார்.
அவரிடம் பேசுகையில், நிருபராக பணிபுரிந்துள்ள நிலையில் 2021ம் ஆண்டு நாமக்கல் தொகுதியில் பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதாக கூறுகிறார்.
ஸ்டிக்கர் அடித்த செலவு
தேர்தல் நடைமுறைகளை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்
ஆனால் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு உழைக்கவேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும்,
தேர்தல் செலவினங்கள், வாக்குப்பதிவு முறைகள், பிரச்சாரக்கட்டுப்பாடுகள் போன்ற தேர்தல் நடைமுறைகளை குறித்து அறிந்துகொள்ளவே அதில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து தனது இணைய சேனலில் பதிவுசெய்ய திட்டமிட்டதாகவும் கூறினார்.
தேர்தல் செலவீனமாக தேர்தல் ஆணையம் 40லட்சத்தை உச்சவரம்பாக வைத்துள்ளது.
ஆனால் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் மேற்கொண்டால் இந்த தொகையே அதிகம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து தேர்தல் செலவினங்கள் குறித்து 4 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தில் தகவலளிப்பது ஓர் விதியாகும்.
அதன்படி, நேற்று தனது செலவுகணக்கினை பில்லுடன் தீபன் தாக்கல் செய்துள்ளார்.
அதில் மைக் சின்ன ஸ்டிக்கர் அடிக்க 315ரூபாய் செலவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.