Page Loader
முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்? 
முடங்கிய EPFO e-பாஸ்புக் சேவை

முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்? 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 26, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

EPFO அமைப்பின் இணையதளத்தில், e-பாஸ்புக் சேவைத்தளத்தில் உள்நுழைய முடியவில்லை எனவும், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் சில பயனாளர்கள் புகாரளித்திருக்கின்றனர். EPFO-வின் சேவைகளை இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக வழங்கி வருகிறது அந்த அமைப்பு. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அத்தளங்களில் சில சேவைகளை பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவை சரிசெய்யப்பட்டுவிடும். ஆனால், தற்போது தொடர்ந்து சில நாட்களாகவே இந்த பிரச்சினை நீடித்து வருவதாகப் பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பயனாளர் ஒருவர் எழுப்பிய புகாருக்கும், 'அது குறித்து சோதனை செய்து வருவதாகவும், விரைவில் சரிசெய்யப்படும்' எனவும் அதன் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து பதிலளித்திருக்கிறது EPFO.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post