Page Loader
புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம்
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம்

புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2024
07:08 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், டெல்லி என்சிஆரில் தனது இந்திய வளாகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாட்டில் வளாகத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் ஒப்படைக்கப்பட்டது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. "சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம், நாட்டில் ஒரு விரிவான வளாகத்தை உருவாக்க இந்திய அரசாங்கத்தால் உரிமம் பெற்ற முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து உரிமம் வழங்கப்படுவது இப்போது முன்னேறத் திட்டமிடுவதற்கு வழி வகுக்கும்." என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020இல் கூறப்பட்ட உள்நாட்டில் சர்வதேசமயமாக்கல் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு அடியாகும் என்று கூறினார். "இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுதல் என்பது கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, இது ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் துடிப்பான சூழலை உருவாக்குவதாகும். உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய உலகளாவிய நெறிமுறைகளைக் கொண்ட உலகளாவிய குடிமக்களை உருவாக்கும் பொறுப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது." என்று பிரதான் கூறினார்.