Page Loader
தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது
ஜூன் 7 பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது

தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 27, 2025
11:26 am

செய்தி முன்னோட்டம்

2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: "தரவரிசை பட்டியல் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 2.41 லட்சம் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசை எண்ணை [www.tneaonline.org] (http://www.tneaonline.org) என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்," எனத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அதிகரிப்பு

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

இந்த ஆண்டில், கடந்த ஆண்டைவிட 40,645 மாணவர்கள் அதிகமாக பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டு பட்டியலில் கடலூரைச் சேர்ந்த தரணி முதலிடம் பிடித்துள்ளார். சென்னை மாணவி மைதிலி இரண்டாம் இடத்தில் உள்ளார். பொதுப்பிரிவில், முழு மதிப்பெண் (200/200) பெற்ற 145 மாணவர்கள் உள்ளனர். முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். மாநில அளவில் பொது பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகிக்கிறார். நாமக்கல் மாணவி கார்த்திகா இரண்டாம் இடம், அமலன் ஆன்டோ என்ற மாணவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

கலந்தாய்வு தேதி

கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

பொது பிரிவு கலந்தாய்வு: ஜூலை 14 - ஆகஸ்ட் 19 சிறப்பு பிரிவு கலந்தாய்வு: ஜூலை 7 - ஜூலை 11 துணை கலந்தாய்வு: ஆகஸ்ட் 21 - ஆகஸ்ட் 23 இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.