'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் நேற்று அமலாக்க துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.
இதை எதிர்த்து, அவரது மனைவி எஸ் மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், "கைது குறித்து எங்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படவில்லை. விசாரணையின் போது என் கணவர் தாக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை நடந்த போது சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவிலை." என்று கூறப்பட்டிருந்தது.
ஹஜ்ஸ்க்
அடுத்த விசாரணை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது
இந்த மனு நேற்று மத்திய 2:15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இதை விசாரிக்க இருந்த ஒரு நீதிபதி இதிலிருந்து விலகினார்.
இதனையடுத்து, ஒரு புதிய அமர்வில் இந்த மனு பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணை ஜூன் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் வைத்து இருதய அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.