
கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிக கோலாகலமாக இன்று(நவ.,12) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று(நவ.,12) மிரட்டல் இமெயில் ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இமெயிலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும், பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து, இந்த மிரட்டல் குறித்த தகவலை கோவை காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோவையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி
போலி இமெயில் என காவல்துறை அறிக்கை
மிரட்டல் இமெயில் முகவரியினை ஆய்வு செய்ததில் அது விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் உள்ள இசக்கி என்பவருடையது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த இசக்கி என்னும் நபரை பிடித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இது ஒரு போலி இமெயில் என்றும்,
குண்டுவெடிப்பு மிரட்டல் ஓர் வதந்தி, யாரும் பயப்படவேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.
கடந்த தீபாவளி பண்டிகையின் முன்னர் கோவையில் உக்கடம் என்னும் பகுதியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஜமூசா மூபின் பலியான நிலையில், 14 பேரினை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மிரட்டல் இமெயில் குறித்த செய்தி
#breaking #kovai #petrolbomb #ThanthiTV
கோவையில் வெடிகுண்டு மிரட்டல்..
பதற வைத்த பரபரப்பு இமெயில் pic.twitter.com/RCEQEcEXP7 — Thanthi TV (@ThanthiTV) November 12, 2023