தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
7 கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில், முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று காலை 11 மணி முதல் வேட்மனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மார்ச் 28-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
embed
வேட்பு மனு
#ElectionUpdate | தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடக்கம்!#SunNews | #ElectionTN | #NominationFiling | #ElectionsWithSunNews pic.twitter.com/9doJLF4KrV— Sun News (@sunnewstamil) March 20, 2024