தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ள நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Watch live 📺
— Election Commission of India (@ECISVEEP) March 15, 2026
Press Conference by #ECI to announce the schedule for General Elections to Legislative
Assemblies of #Assam, #Kerala, #Puducherry, #TamilNadu and #WestBengal - 2026
Time: 4 PM
Date: Sunday, 15th March, 2026
Link to watch live: https://t.co/pDlLfrK6l8
விவரங்கள்
தேர்தல் தேதி விவரங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. ஏப்ரல் 6 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 7 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 16ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் மார்ச் 23 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மார்ச் 24 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். மார்ச் 26 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் மட்டும் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டடமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 30 அன்று அரசிதழில் வெளியிடப்படும். ஏப்ரல் 6 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 7 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் 4 அன்று அரசிதழில் வெளியிடப்படும். ஏப்ரல் 9 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 10 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 13 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.