தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும்
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 16ஆம் தேதி(நாளை) மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும். ஏப்ரல்/மே மாதங்களில், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி, தேர்தல் ஆணையம்,(ECI) எக்ஸ்-இல், ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. அதோடு நான்கு சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள், (இரு தேர்தலும், ஒரே நேரத்தில் நடத்த திட்டம்) அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல்/மே மாதங்களில் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படும் நான்கு மாநிலங்கள், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகியவை. அதேபோல, சிக்கிம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்.