ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சந்து ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதன்படி ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 18 அன்றும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட தேர்தல்கள் முறையே செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. இதேபோல் ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, இரு மாநில தேர்தல் முடிவுகளும் அக்டோபர் 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன