காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் இம்மாதம் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது. இத்தேர்தல்கள் 2024ம்.,ஆண்டின் நாடாளுமன்றம் தேர்தலின் ஓர் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. எனவே, பாஜக'வை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, 'பிட்பாக்கெட்', 'பீடை' உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி அடுத்த 2 நாட்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்கவேண்டும் என்றுக்கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசாத நிலையில், அவர் மோடியை குறிப்பிட்டு விமர்சனம் செய்ததாக தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.