
மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டசபை தேர்தலுக்கான செய்தியாளர் சந்திப்பை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 3 மணிக்கு சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவிக்க உள்ளது. ஆனால், செய்தியாளர் சந்திப்புக்கான அழைப்பில் எந்த மாநிலங்களுக்கு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் 3 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஜனவரியில் முடிவடைகிறது.
இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ஆம் தேதியை கெடுவாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தேர்தல் ஆணையம் மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு
Election Commission of India to announce the schedule for General Election to Legislative Assemblies, today. pic.twitter.com/EckI51NcMI
— ANI (@ANI) August 16, 2024