எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா
ELCOT மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அனீஷ் சேகர், இதற்கு முன்னர், மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். அப்போது, முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு தகவல் தொழிநுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜனுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, ELCOT மேலாண் இயக்குனராக பதவியேற்றார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச தொழிநுட்ப கருத்தரங்கத்தில் அவர் திறம்பட செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அனீஷ் சேகர், திருவனந்தபுரத்தில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, 2011 ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர், மேட்டூரில் சப்-கலெக்டராக பதவியேற்ற அனீஷ், 2021-2023 ஆண்டு வரை மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார்.