மணல்கொள்ளை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் சம்மந்தப்பட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர், திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
card 2
தொடரும் சோதனைகள்
புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இவை அனைத்துமே செந்தில் பாலாஜி வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்டாலும், மண்கொள்ளை சார்ந்து நடத்தப்படும் ரெய்டுகள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சர் துரைமுருகன் தான் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சரவையை கையாள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.