
திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
செய்தி முன்னோட்டம்
சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 'வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டமான 2002 விதியின் கீழ் மத்திய முன்னாள் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது'.
'கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனமான அவரின் பினாமி நிறுவன பெயரில் அமலாக்கத்துறை இந்த சொத்துக்களை கைப்பற்றியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
ட்விட்டர் பதிவு
#JUSTIN ஆ.ராசா சொத்துக்களை கையகம் செய்த அமலாக்கத்துறை #ARaja #ED #EnforcementDirectorate #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/shv4DjrZGz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 10, 2023