
பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
செய்தி முன்னோட்டம்
குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பாகுபலி ஷாவுடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர் லோக் பிரகாஷன் லிமிடெட் என்ற நாளிதழின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். அவரது சகோதரர் ஷ்ரேயான்ஷ் ஷா, அந்த நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.
குற்றச்சாட்டுகளை விவரிக்கும் முறையான அறிக்கையை அமலாக்கத்துறை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கைது அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான அரசாங்கம் விமர்சன ஊடகக் குரல்களை குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
ராகுல் காந்தி
ரஹீல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கைது நடவடிக்கையை பகிரங்கமாகக் கண்டித்துள்ளனர்.
இது ஜனநாயக மதிப்புகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை ஜனநாயகத்தின் குரலை அடக்கும் முயற்சி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அரசாங்கங்கள் சுதந்திர ஊடகங்களை குறிவைக்கும்போது, ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று எச்சரித்தார்.
மோடி அரசாங்கம் பய அரசியலை நாடுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், அமலாக்கத்துறை இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்ட பின்னரே கைதுக்கான முழு காரணமும் தெரிய வரும்.