LOADING...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்டது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
06:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் தேதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்க்கண்ட தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன: 1. டிசம்பர் 27, 2025 (சனிக்கிழமை) 2. டிசம்பர் 28, 2025 (ஞாயிற்றுக்கிழமை) 3. ஜனவரி 03, 2026 (சனிக்கிழமை) 4. ஜனவரி 04, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

விண்ணப்பம்

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

பெயர் சேர்க்க (Form-6): ஜனவரி 1, 2026 அன்று 18 வயது நிறைவடைபவர்கள் மற்றும் இதுவரை பெயர் சேர்க்காத தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்க / ஆட்சேபனை தெரிவிக்க (Form-7): முகவரி மாற்றம் அல்லது இறந்தவர்களின் பெயரை நீக்க விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்ய / முகவரி மாற்ற (Form-8): வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாறினாலும் அல்லது புதிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC) கோரவும் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம். நேரில் வர இயலாதவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 'Voter Helpline' மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement