Page Loader
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு 

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2024
03:02 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. 6.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் ​​உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கத்தின் மையம் காபூலில் இருந்து வடகிழக்கே 241 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

வட இந்தியாவில் நில அதிர்வு