நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர்
செய்தி முன்னோட்டம்
வடக்கு கோவாவின் பெர்னெமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை கத்தியால் குத்தியதற்காக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றலா பயணிக்கு உதவ சென்ற இன்னொருவரையும் அந்த ஊழியர் கத்தியால் குத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் அபிஷேக் வர்மா என்றும், காயமடைந்தவர் யூரிகோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யூரிகோவின் கூடாரத்திற்குள் அபிஷேக் வர்மா அத்துமீறி நுழைந்ததும், அதை எதிர்பாராத யூரிகோ உதவி கோரி சத்தமிட்டிருக்கிறார்.
அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த உள்ளூர் நபர் ஒருவர், சுற்றுலாப் பயணியை மீட்க முயற்சித்திருக்கிறார்.
இன்னொரு நபரை அங்கு எதிர்பாராத குற்றவாளி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
அதன்பின்னர், கத்தியுடன் திரும்பிய குற்றவாளி, உள்ளூர் நபரையும் சுற்றுலா பயணியையும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
கோவா
கோவாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள்
இந்த தகவல்களை காவல்துறை கண்காணிப்பாளர் (SP) நிதின் வல்சன் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த சுற்றுலா பயணியும் உள்ளூர் நபரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக எஸ்பி மேலும் கூறியுள்ளார்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டது என்றும் ஐபிசியின் 452,354,307,506(II) பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு ரஷ்ய பெண்ணைத் தாக்கியதற்காக இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் வடக்கு கோவாவில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சில வாரங்களுக்கு முன், கோவாவிற்கு சென்றிருந்த மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு ரிசார்ட் ஊழியரின் ஆட்களால் தாக்கப்பட்டனர்.