Page Loader
பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம்
ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்

பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம்

எழுதியவர் Nivetha P
Jan 06, 2023
06:23 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த நிலையில், அதிலுருந்த போதை நபர் ஒருவர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்தது. அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில் இச்சம்பவம் அரங்கேறிய பத்தே நாளில், மீண்டும் டிசம்பர் 6ம் தேதி பிரான்ஸ் நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திலும் இதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.

இரு பயணிகளும் பரஸ்பர சமாதானம்

போலீஸ் விசாரணையில் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக்கொடுத்த போதை ஆண் பயணி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுருந்து டெல்லிக்கு டிசம்பர் 6ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த ஆண் மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் போதையில் தனது அருகில் இருந்த பெண் பயணியின் கம்பளி போர்வையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனையடுத்து டெல்லி வந்தடைந்ததும், விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அந்த ஆண் பயணியை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுத தந்த பயணி, பெண் பயணியோடு பரஸ்பர சமாதானம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இப்பிரச்சனையும் அதோடு முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.