இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி
செய்தி முன்னோட்டம்
டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 7:56 மணியளவில் IGI விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 6E 308 விமானத்தில் நடந்ததிருக்கிறது.
"டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 6E 308 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கால வழியின் கதவை திறக்க முயன்றார்." என்று இண்டிகோ விமானம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா
மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ராவால் ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்சனை
"இந்த விதிமீறலைக் கவனித்த விமான பணியாளர்கள் கேப்டனை எச்சரித்தனர். மேலும் பயணி உரிய முறையில் எச்சரிக்கப்பட்டார். இதனால் விமான பாதுகாப்பிற்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை" என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு வந்ததும் அந்த பயணி CISFயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போன்ற ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்திலும் நடந்தது.
அப்போது, மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் சகபயணியான ஒரு பெண்ணின் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
குடி போதையில் பயணிக்கும் பயணிகளால் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.