சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் ஜி 20 உச்சி மாநாட்டிற்காக டெல்லிக்கு வந்திருந்த சீன பிரதிநிதிகளால் டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
சீனப் பிரதிநிதிகள் டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். இது நகரத்தின் தூதரகப் பகுதியாகும்.
சீனப் பிரதிநிதிகள் ஹோட்டலுக்கு ஒரு பையைக் கொண்டு வந்திருந்தனர். அந்த பையை சோதனை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டபோது, சீனப் பிரதிநிதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பையை சோதனை செய்யுமாறு போலீசார் பலமுறை வலியுறுத்தியும் சீன பிரதிநிதிகள் அசைந்து கொடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
டொமவ்
அந்த பையில் என்ன இருந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை
கடைசி வரை, சீன தூதுக்குழுவினர் அந்த பையை சோதனை செய்ய விடவில்லை என்றும், அதை கடைசியாக சீனத் தூதரகத்திற்கு அவர்கள் எடுத்து சென்றனர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு வந்த சீன தூதுக்குழுவினர் யாரும் சோதனை செய்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
ஆனால், சீன பிரதிநிதிகள் தங்கியிருந்த அறை ஒன்றில், "சந்தேகத்திற்குரிய உபகரணங்களை" இருந்ததை ஒரு ஹோட்டல் ஊழியர் கண்டார் என்றும் கூறப்படுகிறது.
ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9-10ஆம் தேதிகளல் இந்தியாவின் தலைமையின் கீழ் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
உக்ரைன் போர் உள்ளிட்ட உலக பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்த உலக தலைவர்கள், பல முக்கிய முடிவுகளையும் எடுத்தனர்.