சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை
இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படுபவர் சட்டமேதை அம்பேத்கர். இவர் 1891ம்ஆண்டு ஏப்ரல் 14ம்தேதி பிறந்தார், சட்ட வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக இவர் தம்மை நிரூபித்து கொண்டார் என்றால் மிகையல்ல. இந்நிலையில் இன்று இவரது 133வது பிறந்தநாளினை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இதில் எதிர்கட்சி தலைவர்கள் குறிப்பாக சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ராம்நாத்கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்களும் மரியாதை செலுத்தினார்கள்.