
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வரும் ஆகஸ்ட் 21 -உடன் முடிவடைகிறது
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததன்படி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தொகுதிவாரியாக, வாக்குச்சாவடி அதிகாரிகள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி, கடந்த ஜூலை 21-ந்தேதி தொடங்கப்பட்டது.
இந்த பணி, இன்னும் மூன்று நாட்களில், ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், மறுநாள், அதாவது, ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி வரை, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை உறுதி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்.
card 2
விரைவில் வரைவு பட்டியல் வெளியீடு
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லை என்றால், அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரிகளிலும், வாக்காளர் செயலி மூலமாகவும், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.