
'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர்
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலத்தினை சேர்ந்த பஞ்சனன் கலிதா என்பவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், ரத்த தானம் செய்தல், மரங்களை பேணி வளர்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தினை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த இளைஞர், 4 மாநிலங்களை கடந்து தற்போது 5வது மாநிலமாக தமிழ்நாடு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தை தனது பயணத்தின் மூலம் அடைந்துள்ள இவர் அடுத்து 6வது மாநிலமாக கேரளா செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இளைஞர்
அசாம் இளைஞருக்கு குவியும் நாட்டு மக்களின் ஆதரவுகள்
நாட்டு மக்கள் நலனை மனதில் கொண்டு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வரும் கலிதா, கையில் பணம் இல்லாமல் தான் இந்த இந்தியா முழுவதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தினை துவங்கியுள்ளார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக சைக்கிள் பயணம் செய்து வரும் இந்த அசாம் இளைஞர்களுக்கு நாட்டு மக்கள் தங்கள் முழு ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் சந்தோஷத்திற்காக மது அருந்தி வாகனம் ஓட்டி பிறரை காயப்படுத்தி கொண்டும், பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டும் வருகின்றனர்.
அப்படிப்பட்ட இளைஞர்கள் மத்தியில் இவர் ஓர் விதிவிலக்காக தான் பார்க்கப்படுகிறார்.