மொழி புரட்சி காலத்தினை மீண்டும் உருவாக்கிடாதீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அதன்படி, அமித்ஷாவின் இந்தப்பேச்சு எதேச்சாதிக்கார முயற்சி என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, மற்ற மொழி பேசும் அனைத்து இனமக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் முயற்சி இது. சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க தமிழ்நாடு ஒன்றும் தலையாட்டி பொம்மையல்ல. தமிழகம் வந்தால் தொன்மையான மொழி என நாவில் தேன்தடவுவதும், டெல்லிக்கு சென்றப்பின் நஞ்சை பரப்புவதும் பாஜக'வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம் என பதிவிட்டுள்ளார். மேலும்,'1965ல் இருந்த மொழிப்புரட்சி காலத்தினை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.