
உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
உலக நாடுகளின் அரசியலில் பலதரப்பட்ட பதவிகளை சமீபகாலமாக இந்திய வம்சாவளியை சேர்ந்தோர் வகித்துவருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவில் 2024ம்ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே என்பவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் போட்டியிடப்போவதாக முன்னரே அறிவித்துள்ள நிலையில், இவரின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக கடந்தாண்டு பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உலகையே தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார்.
210 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் முதல் இந்து பிரதமரும் இவர்தான், மிகஇளைய பிரதமரும் இவர்தான் என்பது நினைவில் கொள்ளவேண்டியவை.
இந்தியாவின் பெருமை
உலகளவில் உயர் பதவிகளிலுள்ள பல இந்திய தலைவர்கள்
ரிஷி சுனக்'கை தவிர்த்து இன்னும் சில இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து அரசியலில் முக்கியப்பங்கு வகித்துவருகிறார்கள்.
அதன்படி ரிஷி சுனக்'கின் மந்திரிசபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக உள்ளார்.
தொடர்ந்து அயர்லாந்தை 2017-2020வரை ஆட்சிசெய்து வந்த இந்திய வம்சாவளி லியோ வரத்கர், கடந்தாண்டின் இறுதியில் மீண்டும் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
2015ம்ஆண்டு முதல் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமராக இருந்துவரும் அன்டோனியா கோஸ்டா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
கனடாவின் ராணுவ அமைச்சராக உள்ள அனிதாஆனந்த்தின் பெற்றோர் இந்தியர்கள்.
நியூசிலாந்தில் சமூகம் மற்றும் தன்னார்வத்துறை அமைச்சராக உள்ள பிரியங்கா ராமகிருஷ்ணனும் இந்தியவம்சாவளி தான்.
இவ்வாறு உலகம் முழுவதும் இந்திய வம்சாவளி தலைவர்கள் பலர் உயர்பதவிகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமைச்சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.